பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் முகாமில் முருகையன் வீதிப் புனரமைப்பு பணிகள்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக சீரமைக்கப்படாத முகாமில் முருகையன் வீதி ஆலயத்திற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து  வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச மக்களினதும் பிரதேச உறுப்பினர் அருட்செல்வியினதும் தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த புனரமைப்பு பணிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உப தவிசாளர் கயன்  கிராம அபிவிருத்தி  சங்கத்தின் தலைவர் மற்றும் சனசமூக நிலையத்தின் தலைவர் ஆகியோர் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளன.