வவுனியா கிடாச்சூரி பாடசாலையில் கல்வி கற்றும் மாணவிகள் இருவர் குளவி தாக்கியதில் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் நேற்று மதியம் பாடசாலை முடிவுற்று வீடு சென்று கொண்டிருந்த போது வீதியின் அருகில் இருந்த பற்றைக்குள் இருந்த குளவிகள் அவர்களை தாக்கியுள்ளது.

இதனால் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.

குறித்த சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு மாணவிகளே காயமடைந்துள்ளனர்.