(செ.தேன்மொழி)

ஜா- எல பிரதேசத்தில் அடையாளத்தை உறுதிபடுத்த தவரிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா - எல மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் இன்று புதன்கிழமை அதிகாலை கடமையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினரே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சம்பவத்தின் போது கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளர். இதன்போது வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன். அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவிதமான ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன் போது இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யட்டியந்தொட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜா - எல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.