இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்றைய தினம் யாழ்பாணத்தில் கண்டன போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்திலிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றிருந்தது.

ஆளுநர் செயலகத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் ஆளுநருக்கான மகஜரினை ஆளுநரின் உதவிச்செயலாளர் ஜெ.எச்.செல்வநாயகத்திடம் கையளித்திருந்தனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகத்திடம் தமது மகஜரினை கையளித்திருந்ததோடு தமது மன வேதனைகளையும் கூறியிருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட செயலகத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையானர் இடைமறித்து 10 பேரை மாத்திரம் உள் நுழைய அனுமதித்திருந்தனர்.

உள்நுளைந்தவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை துணைத் தூதரக அதிகாரிகளிடம் கையளித்து கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.