பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை இந்த நியமனங்களை வழங்கவில்லை. 

இதனை ஆட்சேபித்து ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த ஆர்ப்பாட்டகாரர்கள் ஊர்வலமாக தேசிய கொள்கைகள் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று தங்களின் கோரிக்கைகளை அமைச்சிடம் கையளிக்க முயற்சித்தும் பொலிசாரினால் அனுமதியளிக்கப்படாத நிலையில் அமைச்சின் முன்பாக பதாகைகளை ஏந்திய வண்ணம் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார். பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து களைந்து சென்றனர்.