வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வு­க­ளினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை உயர் பாது­காப்பு வல­ய­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்தம் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விசேட அனர்த்த முகா­மைத்­துவச் செய­ல­ணி­யுடன் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் பின்­னரே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

வெள்ள நீர் வடிந்­தோ­டி­யதன் பின்னர் குறிப்­பிட்ட பிர­தே­சங்­களில் அதி­க­ளவில் நோய் பர­வு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன. அத்­துடன் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பிர­சே­தங்­க­ளிலும் அதி­க­ளவில் பாதிப்­புகள் உள்­ளன. இதன் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த பிர­தே­சங்­களை உயர் பாது­காப்பு வல­ய­மாக பிரகடனப்படுத்துகிறேன்.

இது இவ்வாறிருக்க இந்த கலந்துரையாடலின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் ஆராயப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் முப்படையினர் அனர்த்த முகாமைத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.