மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நபரொருவரை பார்த்துவிட்டு வீடு சென்ற இருவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பகுதியால் நேற்று (22) மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது நாய் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.