லெபனான் நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளை கண்டு பயந்த குழந்தையை சமாதனம் செய்வதற்காக பாடல்பாடி நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பாப்தா மாவட்டம் வழியாக சென்ற கார் ஒன்றில் 15 மாத ஆண் குழந்தை ஒன்று தமது பெற்றோருடன் பயணித்துள்ளது. அந்த கார் ஆர்ப்பாட்டகாரர்கள் இருந்த இடத்தை  அடைந்த போது காரில் இருந்த குழந்தை அவர்களிள் கூச்சலை கேட்டு பயத்து அழத் தொடங்கியுள்ளது.

குழந்தையின் தாய்  ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குழந்தை அழுவதால் கூச்சலிடுவதை குறைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

பயந்த குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டகாரர்கள் கைகளை தட்டியப்படி பாடவும் நடனமாடவும் தொடங்கினர். இதன் போது இவர்கள் சுறாக்களின் குடும்பத்தைப் பற்றிய “பேபி ஷார்க்“ என்ற சிறுவர் பாடலைப் பாடி குழந்தையை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தை அழுகையை நிறுத்தியதுடன் ஆர்ப்பாட்டகாரர்களை பார்த்து சிரிக்க தொடங்கியுள்ளது. 

இக் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலரால் விரும்பப்பட்டுள்ளதுடன் லெபனானில் மட்டுமன்றி உலகளவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.