வவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்தபோது சமளங்குளம் சந்தியில் அவரை வழிமறித்த மூவர் தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில்  ஆசிரியர் தாக்குதலிற்குள்ளானதுடன் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் வருகை தரும் போது அவரை வழிமறித்து அவரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை சரிபார்த்து, அவரது பெயர் விபரங்களை கேட்ட பின்னரே தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.