நம்­பிக்கை வைத்­துத்தான் அன்று நாம் அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட்டோம். தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­க­வி­டாது ஜனா­தி­ப­தியை தடுத்த முயற்­சி­யொன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. 

அதற்கு முக்­கிய பங்­கா­ளி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இருந்­தனர் என  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அங்­கஜன் ராம­நாதன் தெரி­வித்தார்.

இதே­வேளை, கடந்த ஆட்­சி­யின்­போது நாம் சொல்­லிக்­கொண்டு வந்த தீர்வுத் திட்­டத்­தையும் மக்­க­ளுக்கு வழங்­க­வில்லை. அந்­த­வ­கையில் நாம் இன்று மக்­க­ளுக்கு மிகப்­பெரும் நம்­பிக்கை துரோ­கத்தை செய்­துள்ளோம் எனவும் அவர்­ கு­றிப்­பிட்டார்.

ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில், பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ போட்­டி­யி­டு­கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அவ­ருக்கு ஆத­ர­வு­ தெ­ரி­வித்து அண்­மையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்­றிலும் கைச்­சாத்­திட்­டது. இந்­நி­லையில்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அங்­கஜன்  ராம­நாதன் வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.

அச் செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

கேள்வி: -ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது­ ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ரவு வழங்க எடுத்த தீர்­மானம் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சரி­யா­ன­தென நினைக்­கின்­றீர்­களா?

பதில்:   ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு முதல் நாம் எங்­க­ளு­டைய பிர­தே­சங்­களின் நிலை­மை­களை அவ­தா­னித்­தால், இன்று நல்­லாட்­சி­யென்று சொல்­லிக்­கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் அத­னைக்­கொண்டு வந்­த­வர்கள் கொண்டு வந்­த­மைக்­கான காரணம் என்ன? தேவை என்ன? அந்த தேவைக்­கான காரணம் என்ன? அந்த தேவை தற்­போது பூர்த்தி செய்­யப்­பட்டு விட்­டதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. தற்­போதும் அந்தப் பிரச்­சி­னைகள் இருந்­து­கொண்டே தான் உள்­ளன.

நம்­பிக்கை வைத்­துத்தான் அன்று நாம் அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட்டோம் . அதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி நல்­லாட்­சியை உரு­வாக்க பெரும் பங்கை ஆற்­றி­யது. அந்­த­வ­கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வு­செய்­யப்­பட்­டதன் நன்­றிக்­கடன் இருந்தும் இன்று அதனை அந்­த­மக்­க­ளுக்கு செய்­ய­வி­டாது தடுப்பதற்கு முயற்­சி­யொன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அதற்கு முக்­கிய பங்­காளி என்று சொன்னால் அர­சாங்கம் என்று கூறப்­படும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தான்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி 2015 ஆம் ஆண்டில் புதி­ய­தொரு முயற்­சி­யாக  நல்­லாட்­சியைக் கொண்­டு­வர முயற்­சிக்கும் போது அதற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தது. இந்த ஆத­ரவு வழங்­கி­யமை என்­பது தற்­போது மிகப்­பெ­ரிய தோல்­வி­யாகும். இந்த 5 வரு­ட­காலம் சிறு­பான்மை சமூ­கத்­திற்கும் சரி, பெரும்­பான்மை சமூ­கத்­திற்கும் சரி என்ன பிர­யோ­ச­ன­மான விட­யங்கள் இடம்­பெற்­றன. எமது மக்­களின் பிரச்­சி­னை­களில் கூட அர­சியல் கைதி­களின் விடு­தலை தற்­போதும் தீர்த்­து­வைக்­கப்­ப­ட­வில்லை. காணி­வி­டு­விப்பு மாத்­திரம் ஓர­ள­விற்கு இடம்­பெற்­றுள்­ளது. அதுவும் ஜனா­தி­ப­தியே செய்­துள்ளார். மேலும் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அதே­வே­ளை, பெண்கள் தலை­மைத்­துவம் உள்ள குடும்­பம், பொரு­ளா­தாரம், வேலை­வாய்ப்பு பிரச்­சி­னைகள் உள்­ளன. அதி­க­மாக வேலை­யில்லா திண்­டாட்டம் இருக்­கின்­றது. 

மேலும் ஆவா குழு, போதை­வஸ்து, மது­பானம் போன்ற தீய செயல்­க­ளுக்கு காரணம் வேலை­யில்லா திண்­டாட்டம் தான். பொரு­ளா­தார ரீதி­யாக நாம் எவ்­வ­ளவோ பின்­தங்­கி­யுள்ளோம். வடக்கு மாகா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் 40 வீத­மா­ன­வர்கள் விவ­சா­யத்­தையும் மீன்­பி­டித்­து­றை­யையும் நம்­பி­யுள்­ளனர். இன்று பொரு­ளா­தாரம் அவர்­க­ளுக்கு பெரும் சவா­லா­க­வுள்­ளது. அந்­த­வ­கையில் கடந்த ஆட்­சி­யின்­போது நாம் சொல்­லிக்­கொண்டு வந்த தீர்வுத் திட்­டத்­தையும் மக்­க­ளுக்கு வழங்­க­வில்லை. மக்கள் நம்­பி­யி­ருந்த அடிப்­படைத் தேவை­க­ளையும் நாம் வழங்­க­வில்லை. அந்­த­வ­கையில் நாம் இன்று மக்­க­ளுக்கு மிகப்­பெரும் நம்­பிக்கை துரோ­கத்தை செய்­துள்ளோம். நாம் இலக்­கை­ய­டைய செல்லும் போது அந்­த­வழி தவ­றா­னது என்றால் நாம் மற்­று­மொரு பாதையை தெரி­வு­செய்­வது தான் சரி­யான முடிவு. அந்த அடிப்­ப­டையில் தான் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெறு­மனே ஒரு ஆத­ரவு வழங்­க­வேண்­டு­மென நினைத்து ஆத­ரவு வழங்­க­வில்லை. கடந்த பிர­தேச சபைத் தேர்­தல்­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கணி­ச­மான இடங்­களில் வெற்­றி­பெற்­றுள்­ளது.

மூவின மக்­களும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய கட்­சி­யாக மாற்றப்­பட்டு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் பொது­ஜன பெர­முன என்ற ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன பெர­முன என்ற மிகப்­பெ­ரிய கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்தில் கூட முக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளன. அது என்­ன­வென்றால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தமி­ழர்­களின் பிரச்­சினை மீது அதிக கரி­ச­னை­யுள்­ள­துடன் தமி­ழர்­களை தொடர்­பு­ப­டுத்­திய தீர்­மா­னங்கள் மேற்­கொள்ளும் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­தா­லே­ாசித்த பின்­னரே முடி­வுகள் மேற்­கொள்ள வேண்­டு­மென கூறப்­பட்­டுள்­ளது.  

அதே­வே­ளை, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள தமி­ழர்­கள், முஸ்­லிம்கள் தொடர்பில் முக்­கிய கோரிக்­கை­யொன்­றையும் விடுத்­துள்­ளது. அனைத்து துறை­க­ளிலும் குறிப்­பாக விவ­சா­யம், மீன்­பிடி மற்றும் விளை­யாட்­டுத்­து­றை­க­ளிலும் வட­மா­காணம் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பிடும் போது பின்­தங்­கி­யுள்­ளது.அந்­த­வ­கையில் கிழக்கு மாகா­ணமும் அவ்­வாறே பின்­தங்­கி­யுள்­ளது. எனவே இந்த இரு மாகா­ணங்­க­ளையும் ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது ஏற்­படும் அபி­வி­ருத்தி இடை­வெளி நிரப்­பப்­ப­ட­வேண்டும். அதற்­காக விசேட வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும். அதற்கு ஒரு குழுவை அமைக்­க­வேண்டும் அதற்கு ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் பூரண ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். 

அதே­நேரம் யுத்­தத்­திற்கு பின்னர் ஏற்­பட்ட பிர­தி­ப­லிப்­புக்கள் உள்­ளன. அவற்றில் ஒன்­றுதான் பெண்கள் தலை­மைத்­துவம். வட மாகா­ணத்தில் 20 சத­வீ­த­மான குடும்­பங்கள் பெண்கள் தலை­மைத்­து­வத்தை கொண்­ட­வை­யாக உள்­ளன. அதே­போன்று அர­சியல் கைதி­களின் குடும்­பங்கள் உள்­ளன. அர­சியல் கைதி­களின் விடு­விப்பு தொடர்­பான பிரச்­சி­னை­யுள்­ளது. மக்­களின் காணி விடு­விப்பு தொடர்­பான பிரச்­சி­னை­யுள்­ளது. முன்னாள் போரா­ளி­களின் வாழ்­வா­தாரம் தொடர்­பான பிரச்­சி­னை­யுள்­ளது. இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு நாங்கள் தீர்வு வழங்­காது விட முடி­யாது. 

யுத்தம் நிறை­வ­டைந்­துள்­ளது. அதன்பின் எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்­க­ளுக்­கான தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அதற்கு விசேட குழு அமைத்து அதனை நிறை­வேற்ற வேண்டும். இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களின் அடிப்­ப­டையில் தான் நாம் இன்று ஒரு ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்டு வெற்­றிக்­காக போரா­டு­கின்றோம்.

அந்­த­வ­கையில் நாம் இன்று சரி­யான முடி­வொன்றை எடுத்­துள்ளோம் என்றே நிச்­ச­ய­மாக கூற­மு­டியும். ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருக்­கட்டும் சிறு­பான்மை மக்­க­ளு­டைய வாக்­குகள் சாதா­ர­ண­மா­கவே தமக்கு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். ஏனென்றால் பொது­ஜன பெர­முன கோத்தபாய ராஜ­பக் ஷ என்ற வேட்­பா­ளரை நிய­மித்­துள்­ளது. அவ­ருக்கு எதி­ராக சிறு­பான்மை மக்­க­ளி­டத்தில் ஒரு­வ­கை­யான நிலைப்­பாடு உள்­ளது. அதனை பயன்­ப­டுத்தி சிறு­பான்மை மக்­க­ளுக்கு எவ்­வித எழுத்­து­மூ­லமும் வழங்­கா­து, தமி­ழர்கள் கேட்­பதை வழங்­கவும் தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்டில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுள்­ளது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கூட சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பேசு­வ­தற்­கான சந்­தர்ப்­பமே வழங்­கப்­ப­ட­வில்லை. அந்­த­வ­கையில் தமி­ழர்­களின் அபி­லா­ஷைகள் தேவை­யில்லை, அவர்­களின் தேவை­கள் உள்­வாங்­கப்­ப­டாமல் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. 

கோத்தபாய ராஜ­பக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் தமி­ழர்­களின் மனங்­களை வென்­றாக வேண்டும் அவர்­க­ளுக்­காக மேல­தி­க­மாக ஏதா­வது பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அவர்­க­ளுக்­கான வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்தால் தான் அவர்­களின் மனங்­களை வெல்­ல­மு­டியும் என்ற மன­நிலை அவ­ரி­ட­முள்­ளது. 

2010 ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சரத் பொன்­சே­கா­வுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தது. ஆனால் இன்று அந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னால், போரின் போது முன் நின்று செயற்­பட்­டவர் ஒரு ஜன­நா­ய­க­வா­தி­யாக பார்க்­கப்­படும் போது, நிர்­வாகி ஒரு போரைத் தொடுத்­த­வ­ராக மாற்­றப்­ப­டு­கின்றார். தமக்கு ஏற்­ற­வ­கையில் ஒரு­வரை வெளிப்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றார்­களே தவி­ர, யுத்தம் இடம்­பெற்­ற­மைக்­கான மிக முக்­கிய காரணம் என்ன என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றார்கள் இல்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியும் இதற்கு பங்­கா­ளி­யா­க­வுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நூலகம் எரிக்­கப்­பட்­ட­து. 1983 ஆம் ஆண்டு கல­வரம் போன்ற செயற்­பா­டு­க­ளுக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி கார­ண­மா­க­வுள்­ளது. 

இந்­நி­லையில் எதி­ரியா? துரோ­கியா என்ற நிலை­வரும் போது எதி­ரி­யுடன் கதைத்து பேரம்­பேச முடியும். ஆனால் எம்­மு­ட­னேயே இருந்து எமக்கு உரி­மை­களை தரு­வ­தாக சொல்லி எமது தோளின் மேல் கையை போட்­டுக்­கொண்டு எம்மை ஏமாற்­றிக்­கொண்டு இருப்­ப­வர்­களை தொடர்ச்­சி­யாக நம்ப முடி­யாத நிலை உள்­ளது. இன்­றைய நிலையில் சிறு­பான்­மை­யினர் அனை­வரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குத் தான் ஆத­ரவு வழங்க வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்­றார்கள். அந்­த­வ­கையில் எனது ஆத­ர­வா­ளர்கள் கூட என்­னிடம் கேட்­கி­றார்கள் நீங்கள் ஏன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு ஆத­ரவு வழங்­க­வில்­லை­யென. ஆனால் நாங்கள் அனை­வரும் அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­விட்டால் எமக்கு அடுத்­த­பக்கம் இருப்­ப­தற்கு ஒரு­வரும் இல்லை. அதே­நேரம் அவர்கள் உண்­மை­யாக இருந்தால் நாங்கள் அவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­க­மு­டியும். அவர்கள் எதையும் நிறை­வேற்­றாத பட்­சத்தில் நாங்கள் வேறு ஒரு வழியை நாட­வேண்­டிய தேவை­யுள்­ளது. 

கேள்வி:- இந்த அர­சாங்கம் துரோ­கமி­ழைத்­து­விட்­ட­தாக கூறு­கின்­றீர்கள், பொது­ஜன பெர­முன தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­காது என எவ்­வாறு கூற­மு­டியும் ?

பதில்: -நிபந்­த­னை­களை விதித்­துத்தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வைத்து ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திடம் தமிழ் மக்­க­ளு­டைய தேவை­களை பூர்த்­தி­செய்ய முடி­யா­துள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னங்கள் வரும்­போதும் வர­வு-­செ­ல­வுத்­திட்ட வாக்­­கெ­டுப்பு வரும் போதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­துள்­ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஒரு ஒப்­பந்த ரீதி­யாக பொது­ஜன பெர­மு­னவை ஆத­ரிக்க முன்­வந்­துள்­ளது. அந்­த­வ­கையில் எதிர்­வரும் அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கப்­போ­கின்­றார்கள். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி 20 பாரா­ளு­மன்ற ஆச­னங்­க­ளுடன் சென்றே நிபந்­த­னை­களை விதித்­துள்­ளது. தமிழ், முஸ்­லிம்­களை உள்­ள­டக்­கிய சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இன்று மிகப்­பெ­ரிய கோரிக்­கையை முன்­வைத்­துத்தான் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தபாய ராஜ­ப­க் ஷவை ஆத­ரித்­துள்­ளது. 

மிகப்பெரும் துரோகத்தை செய்துள்ளோம் - அங்கஜன் - பகுதி - II

நேர்காணல் – வீ.பிரியதர்சன்