மிகப்பெரும் துரோகத்தை செய்துள்ளோம் - அங்கஜன் - பகுதி - I

கேள்வி: - ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது ­ஜன பெர­மு­ன­வுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளது. அதில் தமிழ், - முஸ்லிம் மக்­க­ளுக்­கான தீர்­வுகள்  உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளதா ?

பதில்: - ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஜனா­தி­ப­தியும் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருடன் ஏற்­ப­டுத்­திய ஒப்­பந்தம் உள்­ளது. அந்த ஒப்­பந்­தத்தில் ஜனா­தி­ப­தியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இன்று சிறு­பான்மை மக்­க­ளு­டைய விட­யத்தில் கலந்­தா­லோ­சித்தே முடி­வு­களை எட்­ட­வேண்டும். அந்­த­வ­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மிக­முக்­கிய பங்கை தமி­ழர்­க­ளு­டைய விட­யத்தில் ஆற்­ற­வுள்­ளது. அதில் மிக­முக்­கி­ய­மான விடயம் எமது அபி­வி­ருத்தி இடை­வெ­ளியை நிரப்­ப­வேண்டும். அதற்­கான குழுவை அமைக்­க­வேண்டும். எமக்கு தீர்வு கிடைக்கும் வரை நாம் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­ளாது இருக்­க­மு­டி­யாது. 

எமது இளை­ஞர்­களே நாட்­டை­விட்டு குடி­பெ­யர்ந்து கொழும்பு மற்றும் வெளி­நா­டு­களை நோக்கி செல்­கின்­றனர். ஏனென்றால் பொரு­ளா­தார பிரச்­சினை. இவ்­வாறு நாம் எமது பிர­தே­சங்­களில் மக்­களை இழந்­து­விட்டு தீர்­வு­களை பெறு­வதில் எவ்­வித பிர­யோ­ச­ன­மு­மில்லை. தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வேண்­டிய நிலை­யுள்­ளது. அதே­வே­ளை, எங்கள் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்­தியை நோக்­கிய எமது பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற வேண்­டிய அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான உட­னடித் தேவை­களும் உள்­ள­துடன் அடிப்­படைத் தேவை­களும் உள்­ளன. குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் காணி விடு­விப்பு தொடர்­பாக பிரச்­சி­னை­யுள்­ளது. வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் உயர்­பா­து­காப்பு வலயம் என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய பகு­தியில் இரா­ணுவம் உள்­ளது. அது மட்­டு­மல்ல மகா­வலி அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டம், தொல்­பொருள் திணைக்­களம் மற்றும் வன ஜீவ­ரா­சிகள்  திணைக்­களம் என்று பல திணைக்­க­ளங்கள் எமது மக்­க­ளு­டைய காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கா­கத்தான் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றார்­களோ என்ற ஐயம் கூட எமது மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்­ளது. அதனை ஒரு நெறிப்­ப­டுத்தி ஒரு கொள்­கை­யுடன் பிரச்­சி­னை­களை தீர்த்­து, அவ்­வா­றான பிரச்­சி­னைகள் மேலும் எழாமல் தடுப்­ப­தற்­கான ஒரு பொறி­முறை. இவற்­றையும் எமது கோரிக்­கையில் நாம் கொடுத்­துள்ளோம். இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் தீர்­வு­கண்­டி­ருக்க முடியும். முடி­ய­வில்லை என்­பதால் தான்   நாங்கள் இவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுத்­துள்ளோம்.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது­ ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ரவு வழங்கும் நிலையில் எதிர்­கா­லத்தில் உங்­க­ளது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் எவ்­வாறு அமையும் ?

பதில்:ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஸ்ரீல ங்கா பொது­ஜன பெர­மு­னவும் இரண்­டுமே ஒன்­றுதான். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்து உரு­வா­கி­யதே இந்த ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன. எம்­முடன் இருந்து வெளி­யே­றி­ய­வர்கள் தான் அங்­குள்­ளனர். எனவே இரு­வ­ருக்கும் ஒரே­வ­கை­யான கொள்­கைகள் தான் காணப்­படும். அந்­த­வ­கையில் தான் திட்­டங்­களும் நோக்­கங்­களும் ஒன்­றாக காணப்­படும். அதற்­கா­கவே புதிய கூட்­ட­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதுதான் ஸ்ரீலங்கா சுதந்­திர பொது­ஜன பெர­முன. அந்த கூட்­ட­ணியில் இணைந்து ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தொடர்ச்­சி­யாக செயற்­பட்டு மக்­க­ளுக்கு சேவை­யாற்­றுவேன். அத்­துடன் மக்­க­ளுக்கு என்­னு­டைய தேவை­யி­ருந்தால் நான் நிச்­ச­ய­மாக மக்­க­ளுக்கு சேவை­யாற்­றுவேன். 

கேள்வி:- இறு­தி­ யுத்­தத்­தை­ய­டுத்து மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட தரப்­பி­னரை தமி­ழர்கள் வெறுப்­பு­ணர்­வுடன் நோக்­கு­கையில், தமி­ழர்கள் எவ்­வாறு ஆத­ரவு வழங்க முடியும் ?

பதில்:காணா­மல்­போனோர் மட்­டு­மல்ல அவர்­க­ளது குடும்­பத்­திற்­கான ஒரு வேலைத்­திட்டம் குறித்தும் யோச­னை­யுள்­ளது. நாங்கள் இன்று காணா­மல்­போ­னோ­ருக்­கான தீர்­வுகளை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அந்­த­வ­கையில் அவர்­க­ளுக்­கான ஒரு முடி­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். காணா­மல்­போ­னோரின் ஒவ்­வொரு குடும்­பத்தையும் எடுத்­துக்­கொண்­டால், அந்த குடும்­பத்­திற்­காக உழைத்து வரு­மா­னத்தை கொண்­டு­வ­ரக்­கூ­டி­ய­வர்­களே இல்­லா­ம­லுள்­ளனர். வீட்டுத் தலை­வனே இல்­லாத பட்­சத்தில் அவ்­வா­றான குடும்­பங்கள் எவ்­வாறு அன்­றாட வாழ்க்­கையை முன்­னெ­டுப்­பது. அதற்­கான தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வேண்டும். இது தொடர்­பிலும் நாம் கோரிக்கை வைத்­துள்ளோம். பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் இன்று அதி­க­மா­க­வுள்­ளன. அங்­க­வீ­ன­மற்­ற­வர்கள் அதி­க­மா­க­வுள்­ளனர். முன்னாள் போரா­ளிகள் என்று சொல்­லப்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் 12 ஆயிரம் பேர்­வரை புனர்­வாழ்­வ­ளித்து விடு­த­லை­செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு தொழில்கள் ஏற்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டாலும் இன்னும் பலர் இயல்­பு­வாழ்க்­கைக்கு வரு­வ­தற்கு முடி­யாமல் தவித்­துக்­கொண்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கும் ஒரு சிறந்த தீர்வு வேண்டும். இதற்­கெல்லாம் ஒரு பொறி­மு­றை­வேண்டும். இன்று இரா­ணு­வத்தை பெரும்­பான்மை மக்கள் ரண­விரு என்று தெரி­வித்து மதிப்­ப­ளித்து வரு­கின்­றனர். ஏனென்றால் போரில் ஈடு­பட்ட இரு பகு­தி­யி­னரும் ஒரே நாட்டு மக்கள் தான் அந்­த­வ­கையில் எமது பகு­தியில் இவ்­வாறு உள்­ள­வர்­களை அர­சாங்க வேலைத்­திட்­டங்­களில் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்டும். இவ்­வ­ளவு கால­மா­கியும் இவர்­க­ளுக்கு எவ்­வித அர­சாங்க வேலை­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபா வழங்­கு­வ­தாக திட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அது­கூட தற்­போது சரி­யாக வழங்­கப்­ப­டு­வ­தில்லை. எங்­க­ளு­டைய மக்கள் 6 ஆயிரம் ரூபா பணத்­திற்­கா­கவா வீதியில் இறங்கி போரா­டி­னார்கள் என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தன. ஆனால் அதற்கு பதி­லில்லை. ஆனால் அந்த மக்­க­ளுக்­கான தீர்வு வேண்டும். அத்­துடன் அவர்­களை நிரந்­த­ர­மான இயல்­பு­வாழ்க்­கைக்கு கொண்­டு­போ­வ­தற்கு பொறி­முறை தேவை. 

கேள்வி: - காணா­மல்­போனோர் தொடர்பில் பொது­ஜன பெர­மு­னவின் நிலைப்­பாடு எவ் ­வாறு உள்­ளது.

பதில்: போர் நிறை­வுக்கு வந்­தது. அத­னை­ய­டுத்து குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அந்­த­வ­கையில் நான் எவ­ரை­யுமே சரி­யென கூற­வில்லை. நான் யாரை­யுமே சுத்­த­மாக்க விரும்­ப­வில்லை. இன்று சஜித் பிரே­ம­தாஸ மற்றும் கோத்தபாய ராஜ­பக் ஷ ஆகி­யோரை எடுத்­துக்­கொண்டால் எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரைக்கும் மோத­கத்­திற்கும் கொழுக்­கட்­டைக்கும் உள்ள வித்­தி­யாசம் தான். இரண்­டுமே ஒன்று தான். சஜித் பிரே­ம­தா­ஸவை பொறுத்­த­வ­ரையில் தமிழ் மக்­களின் வாக்­குகள் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி கிடைக்கும் என நினைத்து எவ்­வித எதிர்­பார்ப்­பு­க­ளு­மின்றி செயற்­ப­டுவார். அடுத்­த­பக்கம் இருப்­பவர் தமி­ழர்­க­ளு­டைய வாக்கு மேலும் வேண்டும் அல்­லது தமி­ழர்­க­ளு­டைய ஆத­ரவு இல்­லை­யென்று எண்ணி அவர் தமி­ழர்­க­ளு­டைய ஆத­ர­வைப்­பெறு­வ­தற்­காக முழு­மை­யாக முயற்­சியை மேற்­கொள்வார். அதே­வே­ளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வரப்­போகும் அர­சாங்­கத்தில் மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பை வழங்­கப்­போ­கின்றார். அந்­த­வ­கையில் நிச்­ச­ய­மாக தமி­ழர்­க­ளு­டைய அபி­லா­ஷை­களை முன்­வைத்து வரப்­போ­கின்ற அர­சாங்கம் செயற்­படும் என்­றதில் எனக்கு நம்­பிக்­கை­யுள்­ளதால் தான் நாங்கள் இரா­ஜ­தந்­திர ரீதி­யிலும் சாணக்­கி­ய­மா­கவும் சிந்­தித்­துள்ளோம். சிந்­திக்­க­வேண்­டிய தேவை­யுள்­ளது. நாம் இலக்கை அடை­வ­தற்கு கடந்த 2015 இல் முயற்­சியை எடுத்­தி­ருந்தோம். அந்த முயற்சி தோல்­வியில் முடிந்­துள்­ளது. அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அதற்­காக புதிய வழியை தயார்­ப­டுத்தி அந்த வழியில் பய­ணிப்­பதில் தவ­றில்லை. இது தான் புதிய வழி எமது இரா­ஜ­தந்­திர வழி­களைப் பயன்­ப­டுத்தி எமது தமிழ்த் தலை­வர்கள் அனை­வரும் ஒன்­றாகி இந்த புதிய பாதையில் பய­ணித்து எங்­க­ளது தமிழ் மக்­க­ளு­டைய அபி­லா­ஷை­களை நிறை­வேற்ற வேண்டும் என்­றது மக்­க­ளு­டைய தேவை­க­ளாக இருக்­கின்­றது என நான் நினைக்­கின்றேன்.

கேள்வி: - யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமிழ் கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது நிலைப்­பாடு ஒன்­றினை மேற்­கொள்ள எடுக்கும் முயற்­சியை நீங்கள் எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள் ?

பதில்: - யாழ். பல்­க­லைக்­க­ழகம் இன்று முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை எமது மக்­க­ளுக்கு செய்­துள்­ளது. அவர்கள் தேர்தல் தொடர்பில் ஒரு அக்­க­றை­ காட்­டு­வது நல்­ல­ வி­டயம் அதை நான் வர­வேற்­கின்றேன். அதா­வது எமது இளை­ஞர்கள் நிச்­ச­ய­மாக ஈடு­பாட்­டுடன் செயற்­ப­ட­வேண்டும். அவர்கள் தற்­போது முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்டம் எமது மக்­க­ளுக்குத் தேவை­யா­ன­தென அறிந்து அதனை ஒரு அறிக்­கை­யாக செயற்­ப­டுத்­திக்­கொண்டு இருக்­கின்­றனர். அதை இரு ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுக்கும் கொடுத்து அந்த இரு வேட்­பா­ளர்­களில் யார் எழுத்து மூலம் வாக்­கு­று­தி­களை வழங்­கு­கின்­றார்­களோ அவ­ருக்குத் தான் ஆத­ரவு வழங்­குவோம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் எவ­ருமே எழுத்து மூலம் கொடுக்­கப்­போ­வ­தில்லை. ஏன் உண்­மையை நாங்கள் அறிந்­து­கொள்ள வேண்டும். இன்று நாங்கள் என்­னதான் தமி­ழர்­க­ளு­டைய வாக்கு முஸ்­லிம்­க­ளு­டைய வாக்கு தான் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்­கப்­போ­கின்­றது என்று சொன்­னாலும் பெரும்­பான்மை அதி­க­மாக இருக்­கின்­றது. இந்த ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் இரு­வ­ருமே பெரும்­பான்மை வாக்­கிற்­கா­கத்தான் சண்டை போடு­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சார மேடையில் சிறு­பான்மை உறுப்­பி­னர்­க­ளுக்கு பேசக்­கூட நேரம் கொடுக்­க­வில்­லை­யென்றால் ஏன் ? அவர்கள் பெரும்­பான்மை வாக்கை மாத்­தி­ரமே இலக்கு வைத்­துள்­ளார்கள். ஏனெனில் அவர்கள் இரு­வ­ருமே எழுத்­து­மூலம் வாக்­கு­றுதி கொடுக்­கப்­போ­வ­தில்லை. ஆனால் நாம் ஒரு புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் தீர்­மானம் எடுக்­க­வேண்டும். கடந்த முறை எந்த வாக்­கு­று­தி­களோ எழுத்­து­மூலம் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால் தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வு­களை நிறை­வேற்­றுவோம் என தெரி­வித்து எம்மை ஏமாற்­றி­விட்­டார்கள். இந்­த­முறை அப்­ப­டி­யல்­லாது அதற்­கா­கவே நாங்கள் 20 பேர் அர­சாங்­கத்தில் இணைந்து அந்த 20 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வரப்­போகும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கப் போகின்றோம் என்றால் அது மிக­முக்­கி­ய­மான பங்கு இல்­லா­விட்டால் அந்த அர­சாங்­கத்தில் பிரச்­சி­னை­வரும் என்ற அச்­சத்தில் அந்த அர­சாங்கம் எங்­க­ளது கோரிக்­கைக்கும் செவி­ம­டுத்­துத்தான் இயங்கும் என்ற நம்­பிக்­கையில் தான் நாம் ஒரு புதிய வழியில் பய­ணிக்­கின்றோம். அந்­த­வ­கையில் பல்­க­லைக்­க­ழக சமூ­கமும் எடுக்கும் முயற்­சிகள் வீண்­போ­கக்­கூ­டாது. ஆனால் இரு வேட்­பா­ளர்­க­ளுமே எழுத்­து­மூலம் கொடுக்­காத பட்­சத்தில் அவர்கள் சோரக்­கூ­டாது. புதிய இரா­ஜ­தந்­திரம் புதிய யுத்­தி­களை கையாண்டு தமி­ழர்­களின் சாணக்­கி­யத்தைப் பயன்­ப­டுத்தி எமது மக்­களின் உட­னடிப் பிரச்­சி­னை­க­ளையும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்­க­வேண்­டிய வழி­மு­றை­களை காண­வேண்டும். பல்­க­லைக்­க­ழகம் தமிழ் அர­சியல் கட்­சி­களை மாத்­தி­ரமே அழைத்து பொது இணக்­கப்­பாடு எடுத்­துள்­ளது. ஆனால் நாங்­களும் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தானே நாங்­களும் தமிழ் பிர­தே­சத்தில் தான் பிறந்து தமிழ் பிர­தே­சத்­தைதான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றோம். ஆனால் தமிழ் கட்­சி­களை வேறா­கவும் தேசிய கட்சிகளில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வேறாகவும் நோக்குகின்றனர். அவர்கள் நினைக்கின்றனர் நாங்கள் தேசியக் கட்சிகளுக்கு அடிமைகள் என்று. நாங்கள் அவ்வாறு அடிமைகள் அல்ல. நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று எதற்குமே பிரயோசனம் அற்றதாக அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டு தமது சலுகைகளை மாத்திரமே பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் நாமல்ல. நாங்களும் மக்களுக்கு எதுவும் செய்யாது சலுகை­களைப் பெற்றுக்கொண்டு இருந்து விட்டுப்போகலாம். ஆனால் என்னுடைய நோக்கம் அரசாங்கத்துடன் இணைந்து அதுவும் செயற்படுத்தக் கூடியவர்களுடன் இணைந்துதான் எம் மக்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் அவர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு தான் மக்களுக்கான தேவை களை பெற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அரசாங்கத்தில் அவர்கள் இருப்பதால் தான் மக்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் மூலம் தீர்த்து வைக்கக்கூடியதாக இருக்கின் றது. பாராளுமன்றத்தையும் இந்த அரசாங்கத்தையும் இயங்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். ஆனால் தமிழர்களு டைய தீர்வுக்கு பதில் என்ன? காணாமல் போனோருக்கு பதில் என்ன? முன்னாள் போராளிகளின் விடயத்திற்கு பதில் என்ன? தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு பதில் என்ன? எங்களுடைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? எங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கு காரணம் என்ன? யுத்தகாலத்தில் கூட எங்கள் பிள்ளைகளின் கல்வியில் வீழ்ச்சி ஏற்படவில்லை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான 10 வருடங்களில் தான் கல்வி வீழ்ச்சியடைந்தது. இதேபோல் விளையாட்டுத்துறை, வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை போன்றன தலைதூக் கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் எல்லாவகையிலும் பாதிக்கப்பட்டு வந்து கடந்த 2009 ஆண்டில் 8 இலட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்கள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இன்று 2019ஆம்  ஆண்டில் 10 வருடங்களின் பின் 5 இலட் சத்து 64 வாக்காளர்கள் தான் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அந்தவகையில் பார்க்கும் போது எமது இளைஞர்கள் பொரு ளாதார வாய்ப்பு இல்லாது வேறுவேறு பிரதேசங்களை நோக்கிசென்றுகொண் டிருக்கின்றார்கள். ஏன் எமது பிரதேசங் களில் பதவி வெற்றிடங்கள் நிரப்பப் படாம லிருக்கின்றன. எத்தனை பாடசா லைகள் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றன? எத்தனை வைத்தியசாலைகள் தாதியர்கள் இல்லாது இயங்குகின்றன? எமது கல்விசார் சமூகம் பொருளாதார வாய்ப்புக்களைத் தேடி எமது பிரதேசங்களைவிட்டு வெளி யேறிக்கொண்டிருக்கின்றனர். ஏன் எமது தீர்வு கிடைத்தால் பின்னர்தான் அபி விருத்திகளை மேற்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் ஒருதொகை கல்விசார் சமூகம் எமது பிரதேசங்களை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். மற்றுமொரு பக்கத்தால் போதைவஸ்து பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி மதுப்பாவனைக்கு அடிமையாகி அத்து டன் அரிவாள் கலாசாரம், ஆவா குழு என்று எமது இளைஞர்கள் தான் வீணாகிப் போகின்றனர். அந்தவகையில் எமது எதிர் கால சந்ததியினரின் வாழ்க்கை, தலை முறையே அழியக்கூடிய வகையில் எமது வேலைத்திட்டங்கள் உள்ளன. இதற்காகவே ஒரு மாற்றம் தேவை.   

நேர்காணல் – வீ.பிரியதர்சன்