தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலிருந்து வந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் நீர் எடுத்து குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று எத்திமலைப் பகுதியின் சிரிபுர என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சிரிபுர என்ற இடத்தைச் சேர்ந்த ஏழு வயது நிரம்பிய நளின் மிலிந்த தில்சர என்ற சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட பாட்டியின் கூக்குரலினால் அங்கு கூடியவர்கள் சிறுவனை கிணற்றிலிருந்து எடுத்து எத்திமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டமை தெரியவந்துள்ளது.

சிறுவனின் மரணவிசாரணையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என மரண விசாரணை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.