(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு 1,359 முறைபாடுகளும் , பெப்ரல் அமைப்பிற்கு 168 முறைபாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று பிற்பகல் 4 மணிவரையான 15 நாட்களுக்குள் 1,359 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 854 முறைபாடுகளும் , தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 505 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் , தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக ஆயிரத்து 299 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 50 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பத்து முறைபாடுகளும் அளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 168 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் பெப்ரல் அமைப்பு , இதுவரையில் தேர்தல் தொடர்பில் 154 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  168 சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதுடன்,  இதன்போது பாரியளவான சம்பவங்கள் ஆறும், எட்டு சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன. இதேவேளை இந்த வன்முறை சம்பவங்களின் போது காயமடைந்த நிலையில் இருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்பு சுட்டிகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.