நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சாதனை ஈட்டிய மாணவர்கள்  தேசிய மட்டத்தில் விருதுகள் பெற்ற மாணவர்களை கௌரவித்து நினைவுச்சின்னமும் வழங்கும் நிகழ்வு  ,இன்று புதன்கிழமை காலை  அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட செயலாளர் தலைமையில்  மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஓ.கே.எஃப் சரீபா ஒருங்கிணைப்பில் 75 மாணவர்களுக்கு கௌரவிப்பு நடைபெற்றது. இவர்களுள் 5 மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு சாதனை மாணவர்களும் அடங்குகின்றன.

இதில்  அதிதிகளாக  அம்பாறை  மாவட்ட செயலாளர் ரீ.எம்.பண்டார, மேலதிக அரசாங்க அதிபர்களான  அப்துல் லதீப்,  வீ.ஜெகதீசன்,  சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் உட்பட  மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வானது  திறமையான சாதனையாளர்களை வெளி உலகிற்கு கொண்டுவருவதே இந்நிகழ்வின் நோக்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.