இருபத்தைந்து வயதுடைய உடல் ஊனமுற்ற திருமணமாகாத இளம்பெண் கர்ப்பம் தரித்தமைக் குறித்து அப்பெண்ணின் 65 வயது தந்தையை மொனராகலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் கர்ப்பம் தரித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட தந்தை பிரிதொரு இளைஞர் மூலம் தனது மகள் கர்ப்பம் தரித்துள்ளார் என, மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார். இது குறித்து மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட இளைஞரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதோடு கிடைத்த தகவலின்படி பெண்ணின் கர்ப்பம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன், பெண்ணின் தந்தை, பெண்ணின் சகோதரர்கள் இருவர் ஆகியோர் மரபனு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 3 வருடங்களாக நீடித்த இப்பரிசோதனைகளின் அறிக்கை மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து பெண்ணின் தந்தையே மகளின் கர்ப்பத்திற்கு காரணமென்று தெரியவந்துள்ளது. 

இதையடுத்தே குறித்த பெண்ணின் தந்தை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மரபனு அறிக்கையுடன் மொனராகலை நீதிமன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மொனராகலைப் பொலிசார் தெரிவித்தனர்.