(செ.தேன்மொழி)

வெலிகந்த பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை தனது கடைமைநேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

செவனகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பன்விலகம எதிகே மதுஷான் பிரேமகுமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்தவர் சிப்பாய், அவருக்கு கடமை நேரத்தில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கியை கொண்டு தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.