பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5 ஆயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Image result for இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\

இந்த முறை 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, 5 ஆயிரம் ரூபாவை தேயிலை சபையிலிருந்து வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருப்பததாகவும், அதனால், மேலதிக தீபாவளி முற்பணக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியிருந்தது.

தேர்தலுக்காக இவ்வாறு பெய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக இ.தொ.கா தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், குறித்த கொடுப்பனவை வழங்குவதங்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணக் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.