இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ. என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் நிறுவனத்தில் தலைவராக பொறுப்பேற்றார்.

பி.சி.சி.ஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலியும் செயலாளராக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது. 

அத்துடன் இருவரும் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.