அத்தனகலு ஓயா, களனி கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழ்பவர்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, தேசிய வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக குறித்த ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அத்தனகலு ஓயாவின் துன்னமலே பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக ஜா - எல, மினுவாங்கொடை, கட்டான, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது தவிர, களனி கங்கையின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளதால் நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் கலென்கோஸ் போன்ற பகுதிகளில் இருப்பவர்களும் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் வடிகாலமைப்புச் சபை கேட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM