பாக்கிஸ்தான் அணியின் இரு இளம் வேகப்புயல்கள்- அவுஸ்திரேலியாவை நடுங்கச்செய்யப்போவதாக சூளுரை

Published By: Rajeeban

23 Oct, 2019 | 12:19 PM
image

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள பாக்கிஸ்தான் அணியில் 19 மற்றும் 16 வயது வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தான் அணியில் 19 வயது முசாகானும் 16 வயது நசீம்சாவும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

முசாகான் டெஸ்ட் மற்றும் ரி20 அணிகளில் இடம்பெற்றுள்ளார்,16 வயது நசீம்சா டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சவாலான தொடரில் இரு இளைஞர்களிற்கு தெரிவுக்குழுவின் தலைவரும் தலைமைப்பயிற்றுவிப்பாளர் இடமளித்துள்ள துணிச்சலான நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

16 வயது நசீம்சா உள்ளுர் போட்டிகளில் தனது இலக்கு தவறாத பவவுன்சர்களால் பலரை திணறடித்துள்ளார்.

அவுஸ்திரேலியா தொடரில்  தான் உடனடியாக தனது திறமையை வெளிப்படுத்த தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் எனக்கு வாய்ப்பு வழங்கினால் எனது வேகம் மற்றும் ஸ்விங்கை வெளிப்படுத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான சூழ்நிலை காணப்படும் நான் அந்த சூழ்நிலையை முடிந்தளவு பயன்படுத்த முயல்வேன்,அவுஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க முயல்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான ஆடுகளங்களில் பந்து வீசுவது எனக்கு பெரும் அனுபவத்தை தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நான் ஸ்மித் வோர்னரிற்கு பந்து வீசுவது குறித்து சிந்திக்கவில்லை எனது வேகம் மற்றும் விக்கெட்டை வீழ்த்தும் திறனை வெளிப்படுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ள 19 வயது முசா கான் வேகமாக பந்து வீசுவதே எனது பலம் எனவும் குறிப்பிடடுள்ளார்.

வஹார் யூனிஸ் சொயிப் அக்தரே எனது முன்மாதிரிகள் அவர்கள் போல விளையாட விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35