மஹரகம - பன்னிப்பிட்டிய பகுதியில் 18 வயதுடைய இளைஞன்  ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன்  மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவ்வாறு கொலைசெய்யப்பட்ட இளைஞரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களை மஹரகம பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.