பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுப்பதற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் முப்படையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் , கையொப்பமிட்டுள்ள நிலையில், நேற்றைய தினம்(22.10.2019) அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தேசிய கரையோரத்தில் வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு உட்பட்டதாக இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இதற்கு மேலதிகமாக கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலும் பொது மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்காக வரையறுத்து குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கு உட்பட்டதாக சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.