தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் கூட்டம் இன்று கூடுகிறது

Published By: Digital Desk 3

23 Oct, 2019 | 11:11 AM
image

(ஆர்.யசி)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பினை அடுத்து 13 அம்சக் கோரி க்கைகளை முன்னிறுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும்  பேச்சு வார்த்தை நடத்த பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளன.

அதன்படி இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டமும் வெள்ளிக்கிழமைமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதுடன்  இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.  

வடக்கு கிழக்கை  பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் குறித்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் ஐந்தும் தற்போது  தமது நகர்வுகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றன.  

அந்த வகையில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய ஐந்து கட்சிகளும் இந்த வார இறுதிக்குள் கூடி பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்டமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

அதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில்  நடைபெறவுள்ளது. இன்றைய தினம் கூடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தாம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கும் நகர்வுகள் குறித்து ஆராய்ந்த பின்னர் நாளை அல்லது வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தமது இறுதி நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சந்திப்பொன்று நேற்று முன்தினம் இரவும் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் எவ்வாறான வகையில் செயற்படும் என்ற காரணிகள் குறித்தும் இதில் கருத்து பரிமற்றல்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோன்று நேற்று காலை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையில் அது குறித்து பேசியுள்ளனர்.
இதில் வடக்கு கிழக்கின் அரச பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அபிவிருத்திக்கு ஆறாயிரம்  மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு அவசியமாகியுள்ள போதிலும் அவற்றை ஒதுக்காதுள்ள நிலையில் அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  முன்வைத்துள்ளனர். எனினும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில்  அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் மங்கள சமரவீர அதற்குப் பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் அனைத்து  தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக கூறியுள்ள பிரதமர், இந்த வார இறுதிக்குள் ஐந்து தமிழ் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், புதிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19