(இரா­ஜ­துரை ஹஷான்)

தேசிய  பாது­காப்­பி­னையும் பொரு­ளா­தா­ர­த்­தி­னையும்  பல­மான  தலை­மைத்­து­வத்­தி­னாலேயே கட்­டி­யெ­ழுப்ப முடியும். தேசிய  உற்­பத்­தி­க­ளுக்கும் தேசிய மர­பு­ரி­மை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய  ராஜபக்ஷநிச்­சயம்  ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார்.

கட­வத்த நகரில் நேற்று  இடம்பெற்ற  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   அவர்  மேலும் உரை­யாற்­று­கையில்,

இரா­ணு­வத்­தி­ன­ரது பலத்­தி­னையும்    இளை­ஞர்­க­ளி­னது பலத்­தி­னையும் ஒன்­று­ப­டுத்தி   நிச்­சயம் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும். தேசிய பொரு­ளா­தா­ரத்­தி­னையும்   தேசிய பாது­காப்­பி­னையும் முன்­னேற்றும் தேவை  தற்­போது  ஏற்­பட்­டுள்­ளது.  கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக்கொண்டே  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்தேன்.

அடிப்­ப­டை­வாத  கருத்­துக்­களை போதிக்கும்   கற்கை  நெறி­க­ளையும், அடிப்­ப­டை­வா­தத்­தி­னையும் முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க வேண்டும்.   குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்கள் தேசிய  உற்­பத்­தி­க­ளையும் இன்று   வீழ்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளார்கள். இந்­நி­லைமை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

நாட்­டுக்கு எதி­ரான  ஒப்­பந்­தங்­களை   அர­சி­யல்­வா­திகள் இன்று வெற்­றி­க­ர­மாக  செய்­துள்­ளார்கள்.   நாட்­டுக்கு  எதி­ரான  ஒப்­பந்­தங்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிக்கப்படும்.   பலமான  தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் அனைத்து இன  மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்தில் தேசிய  நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள் என்றார்.