சுமார் ஒரு கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டி, வென்னவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவு  அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, (21) இரவு 9.20 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 1.107.5 கிலோ கிராம் (ஒரு கிலோ 107 கிராம் 50 மில்லி கிராம்) ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான நபர், வென்னவத்தை, வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான மொஹமட் சபீக் மொஹமட் சராஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து  சந்தேக நபரை,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.