(ஆர்.யசி)

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பிர­தான  தமிழ் கட்­சி­களின் ஆத­ரவு தமக்கு வேண்டும் என்றும்  தமிழ்க் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலில் தமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமிழர் தரப்­புடன்  சகல விதத்­திலும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு பொது இணைக்­கப்­பாட்டை எட்ட தய­ாராக இருப்­ப­தா­கவும் பிர­தமர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த சம்­பந்தன், தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு உள்­ள­டக்­கிய  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யி­டுங்கள். அதன் பின்னர்  நாம் தீர்­மானம் எடுக்­கின்றோம் என தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள் மும்­மு­ர­மாக  இடம்­பெற்று வரு­கின்ற நிலையில்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்டை இன்­னமும் அறி­விக்­கா­துள்­ளது. இந்­நி­லையில் பிர­தான ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து முன்­வைத்­துள்ள 13 அம்சக் கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தமிழர் அர­சியல் கட்­சிகள் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் எம்.பி ஆகியோர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அழைப்­பை­ய­டுத்து நேற்று முன்­தினம் மாலை அவரை சந்­தித்து பேச்­சி­யி­ருந்­தனர்.

  சம்­பந்தன், சுமந்­திரன் இரு­வ­ருடன் பிர­தமர் தனிப்­பட்ட ரீதியில் இந்த சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட வடக்கு கிழக்கின் தமிழ் கட்­சிகள் இம்­முறை எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு தமது ஆத­ரவை வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கின் தமிழ் கட்­சி­களின் ஆத­ரவை தாம் எப்­போதும் எதிர்­பார்த்து செயற்­ப­டு­வ­தா­கவும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

அத்­துடன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் கட்­சி­க­ளுடன் எப்­போதும் சகல வித­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்க தாம் தய­ராக உள்­ள­தா­கவும் பொது­வான இணக்­கப்­பாடு ஒன்­றினை நாம் முன்­னெ­டுக்க முடியும் எனவும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் கூறி­யுள்­ள­துடன் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்டும் என்றும்  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த சம்­பந்தன்,

தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தாக ஆரம்­பத்தில் நீங்கள் கூறிய விட­யங்­களை உங்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்கி புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முன்­வை­யுங்கள். அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள கார­ணி­களை அடிப்­ப­டை­யாக கொண்டு நாம் எமது தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். இப்­போது எமது நிலைப்­பா­டு­களை உட­ன­டி­யாக கூற வேண்­டிய தேவை ஏற்­ப­ட­வில்லை.

அது­மட்டும் அல்ல, தற்­போது வடக்கு கிழக்கு தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஐந்து பிர­தான தமிழ் கட்­சி­களும் இணைந்து ஒரு நிலைப்­பாட்­டினை எட்­டி­யுள்­ளன. எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் கோரிக்கைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நிலைப்பாடுகளை ஆராய்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை ஆராய்ந்தும் நாம் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்க முடியும் என பிரதமரிடத்தில் எடுத்துக்கூறியுள்ளார்.