நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களுடன் பாகிஸ்தான் விமானமொன்று இன்று காலை 10.30 ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சொந்தமான C 130 என்னும் விமானமே நிவாரணங்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்  நிவாரணப்பொருட்களுடன் இந்திய கப்பல்கள் இரண்டும் விமானம் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியுடன் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் முதல் உதவிகளை வழங்கியுள்ளன.