ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்றிரவு (22.10.2019) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த நபரை மறித்து சோதனையிட்ட போது தலைக்கவசத்துக்குள் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்படிருந்த ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து 115 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யபட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.