(நா.தனுஜா)

நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபித்தோம். எனினும் அதனை மிக வேக­மாக உரு­வாக்­கி­விட்டோம் என்றே நான் கரு­து­கின்றேன். அதற்கு முன்­ன­தாக அரச இயந்­தி­ரத்தைச் சுத்தம் செய்­தி­ருக்க வேண்டும். அதனைச் செய்­யாமல் நல்­லாட்­சியை நிறு­வி­ய­மையால் தற்­போதும் சில குறை­பா­டுகள் உள்­ளன. அதன் கார­ண­மாக மக்கள் எதிர்­பார்த்த அனைத்து விட­யங்­க­ளையும் கடந்த காலத்தில் பூர்த்தி செய்­வ­தற்கு எம்மால் முடி­யா­மல்­போ­னது என்று பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா தெரி­வித்தார்.

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கட்­டு­கம்­பளை நகரில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: நாட்­டு­மக்­ களின் ஜன­நா­ய­கத்­தையும், சுதந்­தி­ரத்­தை யும் உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் நாங்கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின் றோம். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­திற்கு முன்னர் நாட்டில் எவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­பட்­டது என்­பதை நினை­வில்­கொள்ள வேண்டும்.

அப்­போது நாட்டில் ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யொன்றே நில­வி­யது. குடும்ப ஆதிக்­க­மொன்றும் காணப்­பட்­டது. நாட்டின் ஜன­நா­ய­கமும், சுதந்­தி­ரமும், சட்­டமும் கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்டு மக்கள் அச்­சத்­துடன் வாழ்ந்த வெள்ளை வான் யுக­மொன்று இருந்­தது. அதனை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக நாம் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் ஊடாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்றோம். அந்த வெற்றி பெருந்­தொ­கை­யான பணத்­தையும் விட விலை­ம­திக்க முடி­யாத பெறு­ம­தி­யு­டை­ய­தாகும்.

அத்­த­கைய வெற்­றியின் மூலம் உரு­வாக்­கிய ஜன­நா­ய­கத்தைத் தொடர்ந்து தக்­க­வைத் துக் கொள்­வ­தற்­கா­கவே தற்­போது மீண்டும் ஒன்­றி­ணைந்­தி­ருக்­கின்றோம். எனவே இப்­போ­ராட்­டத்தில் எம்மை வெற்­றி­பெறச் செய்­வ­தற்­காக அனை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்றார்.