அனைத்து இனங்­க­ளையும் ஒற்­று­மைப்­ப­டுத்த நட­வ­டிக்கை : அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உல­மா­வில் வைத்து சஜித் தெரிவிப்பு

Published By: Daya

23 Oct, 2019 | 10:13 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அனைத்து இனங்­க­ளையும் ஒற்­று­மைப்­ப­டுத்தி நாம் இலங்­கையர் என்ற உணர்­வோடு வாழ நட­வ­டிக்கை எடுப்பேன் என ஜனா­தி­பதி வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உல­மா­விற்கு வருகை தந்து உல­மா­சபை தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டும்­போதே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

நான் இன, மத பேத­மின்றி நாட்டு மக்­க­ளுக்கு சேவை செய்து வரு­கின்றேன். தொடர்ந்தும் அதே முறையில் சேவை­களை முன்­னெ­டுக்க இருக்­கின்றேன். அத்­துடன் பாது­காப்­பிற்­கா­கவும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் எனது திட்­டங்­களை வகுப்பேன். அதே­போன்று இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கும் பேச்­சுக்கள் யாவற்­றையும் இந்­நாட்டில் தடை செய்து அனைத்து இனங்­க­ளையும் ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­த­னூ­டாக நாம் இலங்­கையர் என்ற உணர்­வோடு வாழ வழி­வ­குப்பேன் என்றார்.

இதன் போது அகில இலங்கை ஜம்­-இய்­யத்துல் உல­மாவின்  தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி குறிப்­பி­டு­கையில்,

 அகில இலங்கை ஜம்­ இய­யத்துல் உலமா 1924 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஒரு அமைப்­பாகும். நீங்­களும் இங்கு வந்­தி­ருப்­ப­தை­யிட்டு மகிழ்ச்சி அடை­கின்றோம். எந்­த­வொரு அர­சியல் சாயத்­தையும் பூசிக்கொள்­ளாத எமது இந்­நி­று­வனம் அவ்­வப்­போது ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்­க­ளுக்கு ஒத்­து­ழைத்து வந்­துள்­ளது. அவ்­வாறே நாட்டில் சகல சமூ­கத்­தவர் மத்­தி­யிலும் சமா­தா­னமும் சக­வாழ்வும் மலர தன்­னா­லான நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து வரு­கின்­றது. எமது நிறு­வனம் இந்­நாட்டின் வளர்ச்­சிக்­காக தன்­னா­லான பல பணி­களை செய்து வரு­கின்­றது.

குறிப்­பாக சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் சக­வாழ்வை கட்­டி­யெ­ழுப்­பவும் பல முயற்­சி­களை செய்­து­வந்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் தீவி­ர­வாதம் வன்­முறை மற்றும் வெறுப்­பூட்டும் பேச்­சு­க­ளுக்கு எதி­ராக பல நட­வ­டிக்­கை­களை ஜம்­இய்யத்துலமா மேற்­கொண்டு வந்­துள்­ளது. இவற்றுள் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவி­ர­வா­தத்­திற்கும் எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்லிம் அமைப்­புக்­களின் கூட்டுப் பிர­க­டனம் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலும் எமது தாய் நாட்டின் வளர்ச்­சிக்கு உங்­க­ளது தந்தை முன்னாள் ஜனா­தி­பதி பிரேம­தாச  பாரிய பங்­காற்­றி­யுள்ளார். அந்த வகையில் தொட­ரான அர­சியல் பாரம்­ப­ரி­யத்தை கொண்ட நீங்கள் நாம் அனை­வரும் இலங்­கை­ய­ராவர் என்ற உணர்­வோடு உங்கள் சகல முயற்­சி­க­ளையும் அமைத்துக் கொள்­வீர்கள் எனவும் இதனை உங்­க­ளது இலட்­சி­ய­மாக எடுத்துக் கொள்­வீர்கள் என்றும் எதிர்­பார்க்­கின்றேன்.

இந்­நாட்டில் சகல சமூ­கங்­களும் ஐக்­கி­ய­மாக வாழவும் பொரு­ளா­தாரம் உட்பட சகல துறைகளிலும் இந்நாடு முன்னேற்றம் அடையவும் எல்லாம் வல்லஇறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்றார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.ச்.எம்.பௌசி,முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார்  இன்னும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50