உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் குறித்த கடி­தங்கள், ஆவ­ணங்கள் என்­ப­வற்றை மேற்­கோள்­காட்டி நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக போலிச் செய்­திகள் பரப்­பப்­பட்டு வரு­வ­தா­கவும் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி செய­லாளர் உதய ஆர்.சென­வி­ரத்ன விசேட அறி­விப்­பொன்றை விடுத்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலைத் தொடர்ந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களின் பாது­காப்பை உறுதி செய்­வது தொடர்பில் என்னால் 2019 ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட ps/sp/sb/c/14/2019 இலக்க சுற்று நிருபம் மற்றும் அதன் தொடர்ச்­சி­யாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் மேற்­கு­றிப்­பிட்ட இடங்­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சாதா­ரண குறிப்­பா­ணைகள் மற்றும் பணிப்­பு­ரை­களை கொண்ட கடி­தங்­க­ளையும் சுற்றுநிரு­பங்­க­ளையும் மேற்கோள்­காட்டி அண்­மையில் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த ஆவ­ணங்­களை முறைகே­டாகக் கையாண்டு சில அரச நிறு­வ­னங்­க­ளையும் பொது­மக்­க­ளையும் அச்­சு­றுத்தும் வகை­யி­லான கடி­தங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தாக தகவல் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

தற்­போது நாட்­டில் எந்­த­வித பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலும் காணப்­ப­ட­வில்லை என்­பதை  பாது­காப்பு துறை­யினர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் இந்த போலி­யான திரிபு­ப­டுத்­தப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் தேவை­யற்ற பீதி­யினை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம் என்­பதை அறி­யத்­த­ரு­கின்றேன்.  அரச நிறு­வ­னங்கள், தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொது­மக்­களின் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­கான அதி­க­பட்ச நட­வ­டிக்­கை­களை பாது­காப்புத் துறை­யினர் மேற்­கொண்­டுள்­ளனர்.  இதனால் அவ­சர அல்­லது அண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களுக்கு  ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறியுள்ளார்.