எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதல் காலாண்­டுக்­காக 1474 பில்­லியன் ரூபா அர­சாங்க செல­வீ­னத்­துக்­காக ஒதுக்­கப்­ப­டு­வ­துடன், அதற்கு மேல­தி­க­மாக அர­சாங்­கத்தின் சார்பில் திரட்ட வேண்­டிய கடன்­தொகை 721 பில்­லியன் ரூபாவை விஞ்­ஞா­த­தாக இருக்­கும்­வ­கையில்  பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்தை பெற­வுள்­ளனர்.

பாரா­ளு­மன்றம் இன்று புதன்­கி­ழமை காலை 10.30 மணிக்கு கூடு­கின்ற நிலையில் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 1 ஆம் திகதி நடை­மு­றைக்கு வரும் வரையில் நான்கு மாத காலத்­துக்­கான அர­சாங்க செல­வீ­னங்­க­ளுக்­காக 1474 பில்­லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்­கெ­டுப்பு இன்­றைய தினம் இடம்­பெ­ற­வுள்­ளது.

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர இந்த கணக்­க­றிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அதேபோல் மேல­தி­க­மாக அர­சாங்­கத்தின் சார்பில் திரட்­டப்­பட வேண்­டிய கடன்­தொகை 721 பில்­லியன் ரூபாவை விஞ்­ஞா­த­தாக இருப்­ப­தற்கும் பாரா­ளு­மன்­றத்தில் அனு­மதி கோரப்­ப­ட­வுள்­ளது.

இன்றும் நாளைய தின­மு­மாக பாரா­ளு­மன்­றத்தைக் கூட்ட ஏற்­க­னவே தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போதும் கூட நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தை கூட்­டாது இன்­றைய தினம் மாத்­திரம் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க பாரா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக்கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் இன்­றைய தினமே நிதி சட்­ட­மூலம், துறை­மு­கங்கள் மற்றும் விமான நிலைய அபி­வி­ருத்தி அற­வீ­டுகள் சட்­டத்தின் கீழ் கட்­ட­ளைகள், உற்­பத்தி வரிச் சட்­டத்தின் கீழான கட்­ட­ளைகள், சுங்க கட்­டளைச் சட்­டத்தின் கீழான விதிகள் உள்­ளிட்­ட­வை­களும், விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழான ஆறு ஒழுங்கு விதிகள், நிதிச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்கு விதிகளும் இன்றைய தினமே நிறைவேற்றப்படவுள்ளன.