நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அந்த நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட அம்புலன்சினால் குடும்பமொன்றின் மீது நபர் ஒருவர் தாக்கியதில் ஏழு மாத  குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்புலன்ஸ் ஒன்று செல்வதையும் அதன் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

இந்த சம்பவத்தில் இரு அம்புலன்ஸ்கள் தொடர்புபட்டுள்ள ஒரு அம்புலன்சை நபர் ஒருவர் கடத்தினார் அதன் பின்னர் மற்றொரு அம்புலன்ஸ் அந்த அம்புலன்சுடன் மோதி அதனை செயலிழக்க செய்தது  எனமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது திட்டமிட்ட தாக்குதலா என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அம்புலன்ஸ் களவாடப்பட்டமை தொடர்பில் பெண்ணொருவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.