தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ

Published By: R. Kalaichelvan

22 Oct, 2019 | 03:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை என்னால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். தேசிய  உற்பத்திகளை பலவீனப்படுத்தும்  இறக்குமதி  உற்பத்திகள் அனைத்தையும் ஆட்சியமைத்து முதல்  காலாண்டிலே  நிறுத்துவேன்.

இலங்கையின்  பாரம்பரிய  உற்பத்திகளுக்குகே  என்றும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலி- நெலுவ  நகரில் இன்று இடம் பெற்ற  பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய  பாதுகாப்பு, தேசிய  பொருளாதாரம் இவ்விரண்டிலும் நடப்புடி அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதை  நாட்டு மக்கள் இன்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பலவீனமான அமைச்சரவையினையும், போட்டித்தன்மையான அரசியல் நிர்வாகத்தையும் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாது.

யுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து  தேசிய  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரம்  முழுமையாக வழங்கப்பட்டது.

ஆட்சி புரிந்த  10 வருட காலத்தில்  நாட்டில் எப்பகுதியிலும்  தீவிரவாதம் தாலைதூக்குவதற்கான  வழிமுறைகள் ஏற்படவில்லை. யுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து விட்டோம் அதனால் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று அலட்சியப்படுத்தவில்லை.

இராணுவ மற்றும் பாதுகாப்பு சார் புலமை பெற்றமையினால்   எமது நாட்டிற்கு  என்றும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை அறிந்தோம் . அதனால் தேசிய பாதுகாப்பினை தொடர்ந்து பலப்படுத்தினோம்.

குறுகிய காலத்திற்குள்  தேசிய பொருளாதாரமும் முன்னேற்றமடைந்தது. ஆசியாவின் ஆச்சரியம்  என்ற   தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி  அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பு நகரம் சிறந்த நகரமாக  நிர்மாணிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.  பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டு    தொடர்ந்து முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத வகையில்  ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

அரசியல் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புக்களை திருப்திப்படுத்தவும்  இராணுவத்தினரையும், புலனாய்வு பிரிவினரையும்  அரசாங்கம்  பழிவாங்கியது. யுத்தத்தை வெற்றிக் கொண்ட இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்துவதற்கான  மார்க்கத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. பாதுகாப்பு அமைச்சின் இலக்கு தேசிய  பாதுகாப்பினை விடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டதை அடிப்படைவாதிகள் தமக்கு   சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  தமது இலக்கினை  வெற்றிக் கொண்டார்கள்.

எமது   ஆட்சியில்  தேசிய பாதுகாப்பிற்கே  எந்நிலையயிலும் முக்கியத்துவம் வழங்கப்படும்.  பொருளாதாரம் தொடர்பில்   எவ்வித    தூரநோக்கு கொள்கைகளும் இல்லாத நிலையில் பொருளாதாரம் முகாமைத்துவம் செய்யப்பட்டமையினால்   தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.  தேசிய உற்பத்திகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவில்லை.  மிளகு,  தேயிலை   உள்ளிட்ட எமது நாட்டுக்குகே உரித்தான உற்பத்திகள்  அனைத்தும் இரண்டாம் நிலையாக்கப்பட்டமையினால்  இந்த உற்பத்திகள் அனைத்தும் இறக்கு மதி   செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  எமது ஆட்சியில்  இறக்குமதி செய்யப்படும் எமது நாட்டு தேசிய உற்பத்திகள் அனைத்தும் தடை செய்யப்படும்.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளுர் உற்பத்தியாளர்கள். வியாபாரிகள் ஊக்குவிக்கபபட வேண்டும். வியாபாரிகளின் நலனை கருத்திற்  கொண்டு    8 தொடக்கம் 11 வரையில் பெறுமதி சேர்(வெட்) வரி குறைக்கப்படும். முதல் ஆண்டு முழுவதும் உற்பத்தியாளர்களின்  உற்பத்திகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.

பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான  கல்வி முறைமை  அறிமுகப்படுத்தப்படும். கல்விப்பொது தாராதர  உயர் தர  பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும்  பல்கழைக்கழகம்  செல்லும் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.  கல்விக்கு அதிகளவிலான நிதி முதலீடு செய்யப்படும் என்தை உறுதியாக குறிப்பிடுகின்றேன். நாட்டு மக்கள்  அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்  முழுமையாக நிறைவேற்றப்படும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33