Published by R. Kalaichelvan on 2019-10-22 14:43:11
(இராஜதுரை ஹஷான்)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரச ஊடகங்கள், அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றது.

மறுபுறம் தேர்தல் சட்டத்தினை மீறும் செயற்பாடுகளும் நாளாந்தம் இடம் பெறுகின்றன. இவ்வாறாக குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏன் இதுவரையில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா கேள்வியெழுப்பினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கல் எதிரணியின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும், அவை தொடரபில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மாத்திரமா காணப்படுகின்றது என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவினை அதிகரிக்கும் நோக்கில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள். அரச ஊடகங்கள் , அரச சொத்துக்களை தமது சுய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்
ஆளும் தரப்பினர் தேர்தல் சட்டத்தினை மீறும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்கள் என்பது தொடர்பில் எதிர் தரப்பினராலும், அமைப்புக்களினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சுமார் 900ற்அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள. இம்முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதுவரையில் எவ்விதமான சட்ட நடடிக்கைகளையும் ஏன் மேற்கொள்ளவில்லையென அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.