கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகமானது தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதரகம்,

அத்தியாவசியத் தேவையை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினால் உண்டாகும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.