இந்திய பிரதமர் மோடி சீன அதிபர்  ஆகிய இருவரும் கடந்த 11, 12 ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது இந்திய பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை இந்திய பிரதமர் எழுதியுள்ளார். 

இந்த கவிதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்திய பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கான பதிவில், 'உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்' எனத் தெரிவித்துள்ளார்.