தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் இணங்­கி­யி­ருந்த நிலையில் அந்த இணக்­கப்­பாட்டு விவ­கா­ர­மா­னது தற்போது தென்­ப­கு­தியில்  பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது.

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி உட்­பட  கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்  புௌாட், , ரெலோ ஆகி­ய­னவும் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­ட­ணியும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியும்  ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் 13 அம்ச திட்­ட­மொன்­றினை தயா­ரித்­தி­ருந்­தன.

யாழ். மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக மாணவ ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் இந்த 13 அம்­சங்­கள் அடங்­கிய பொது ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதில் வடக்கு, கிழக்கு இணைப்பு, சுய­நிர்­ணய  உரி­மை­யு­ட­னான சமஷ்டி தீர்வு,  வடக்கு, கிழக்கில் சிங்­கள பௌத்த குடி­யேற்­றங்­களை  நிறுத்­துதல் உட்­பட பல்­வேறு விட­யங்­களும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டன.

இந்த  13 அம்­சங்­களின் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன்  பேச்­சு­வார்த்தை நடத்­து­வது என்றும் அத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வது என்றும் முடிவு காணப்­பட்­டி­ருந்­தது.  தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் கோரும் வகை­யி­லேயே இந்த ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த ஏழு தசாப்­தத்­திற்கும் மேலாக தமிழ் மக்கள் கோரி­வ­ரு­கின்ற விட­யங்­களே இதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனால்  இந்த விட­யங்கள் குறித்து  ஐந்து தமிழ் கட்சித் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன்  பேசு­வ­தற்கு முன்­னரே தென்­ப­கு­தியில்  இந்த ஆவணம் தொடர்பில் இன­வாத பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. 

சில தென்­ப­குதி பத்­தி­ரி­கை­களும்  இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும்  இந்த விட­யத்தை பெரும் பூதா­க­ர­மாக காண்­பித்து சிங்­கள மக்­களை  குழப்பும் வகையில் செயற்­பட்­டுள்­ளன.  தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஈழத்தைக் கோரு­வ­ தா­கவும் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் அடைய முடி­யா­ததை ஆவ­ணங்­களின் மூலம் அடை­வ­தற்கு இந்த தமிழ் கட்­சிகள் முயல்­வ­தா­கவும்  பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

இந்த நிலையில் ஐந்து தமிழ் கட்­சி­களின்  13 அம்ச திட்டம் குறித்து பேசு­வ­தற்கு தயா­ரில்லை என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.  வடக்கில்  தமிழ் கட்­சிகள் இணைந்து தயா­ரித்­துள்ள 13 அம்­சங்­களின் அடிப்­ப­டையில் அந்­தக்­கட்­சி­க­ளுடன் பேச்­சு­ வார்த்தை நடத்­த­மாட்டேன். அதில் எந்தப் பய­னு­மில்லை. பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு என்று கேட்டால் அதற்கு  நான் பதி­ல­ளிக்கத் தயார். ஆனால் இந்த விடயம் தொடர்பில்  கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு கூட நான் தயா­ரில்லை என்று கோத்­த­பாய ராஜ­பக் ஷ அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான  மஹிந்த ராஜ­பக் ஷவும் தேர்­த­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­களை  முன்­வைத்தால் அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம். எமக்­கு ­எமது  நாடும் இறை­மை­யுமே முக்­கி­ய­மாகும்.  நாட்டைப் பேரம்­பேசி எந்­தக் ­கோ­ரிக்­கை­யையும் நாங்கள் ஏற்கத் தயா­ரில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  நேற்று  பெலி­யத்­தையில் நடை­பெற்ற பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் இதனை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இந்த  விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான மாவை சேனா­தி­ராஜா  தமிழ் கட்­சி­களின் 13 அம்ச கோரிக்­கை­களை நிரா­க­ரிக்கும் பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ரில்லை.  யார் எமது கோரிக்­கை­களை ஏற்­கின்­றார்­களோ  அவர்­க­ளுக்கு எமது ஆத­ரவை வழங்க முடியும். இந்த விடயம் தொடர்பில் ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும்  இந்த வாரம் கூடி இறு­தித்­தீர்­மா­னத்தை எடுக்­க­வுள்ளோம் என்று  அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இவ்­வாறு  தமிழ் கட்­சி­களின் 13 அம்ச கோரிக்­கை­யினை பொது­ஜன பெர­முன நிரா­க­ரித்­துள்ள நிலையில்  இந்த விடயம் தொடர்பில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­ கட்­சியின்  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு  இந்­தக்­கட்­சிகள் முனைந்­து ­வ­ரு­கின்­றன.  யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன்  மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இதன்­போது  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ,  பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர,  ராஜித சேனா­ரட்ன ஆகி­யோரை ஒன்­றாக சந்­தித்து இந்த விடயம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டு­மென்று இவர்கள்  கோரி­யுள்­ளனர்.  தான் கொழும்பு திரும்­பி­யதும் இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி  பேச்­சு­வார்த்­தைக்கு நேரம் ஒதுக்­கு­வ­தாக இந்த சந்­திப்­புக்­களில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இத­னை­விட முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னையும்  தனித்து சந்­திப்­ப­தற்கு  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரும்­பு­வ­தாக பிர­தமர்  செய­ல­கத்­தி­லி­ருந்து அழைப்பு விடுக்­கப்­பட்ட போதிலும்  தான் தனித்து பேச­வி­ரும்­ப­வில்லை என்றும் ஐந்து கட்சித் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து சந்­திப்­ப­தற்­கான ஏற்­பாட்டை செய்­யு­மாறும் முன்னாள் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கேட்­டுக்­கொண்­டுள்ளார். இதற்­கி­ணங்க சில தினங்­களில் சந்­திப்­புக்கு ஏற்­பாடு செய்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினர் ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்­களை சந்­தித்து பேசி­னாலும்  இந்த 13 அம்ச திட்­டங்­களை தற்­போ­தைய நிலையில்  ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. ஏனெனில் தென்­ப­கு­தியில் இந்த 13 அம்ச கோரிக்­கைகளை முன்­வைத்து இன­வாத பிர­சாரம் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­ய­தாக  அறி­வித்­தாலே ஐக்­கிய தேசிய கட்சி ஈழத்தை தாரை­வார்க்­கப்­போ­வ­தாக தென்­ப­குதி எதி­ர­ணி­யி­னரால் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­படும்.  தற்­போ­து­கூட  சிங்­கள மக்கள் மத்­தியில் இந்த 13 அம்ச திட்­ட­மா­னது பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.  அவ்­வா­றான  சூழலை இன­வாத சக்­திகள்  ஏற்­ப­டுத்­தி­விட்­டுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ சிங்­கள மக்­களின் ஆத­ரவை திசை திருப்பி தேர்­தலை வெற்­றி­கொள்­வ­தற்கு முயன்று வரு­கின்றார்.  ஐந்து கட்­சி­களின் கோரிக்­கை­க­ளுக்கு இணங்­கு­வ­தாக அவர் தெரி­வித்தால்  தேர்­தலில் சிங்­கள மக்­களின் வாக்­கு­களை இழக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்ற அச்சம் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  எனவே தற்­போ­தைய நிலையில் ஐக்­கிய தேசிய கட்சி கூட இந்த 13 அம்ச திட்­டத்­திற்கு சாத­க­மான  நிலைப்­பாட்டை தெரி­விக்­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­யது.

தமிழ் கட்­சி­களின் நிபந்­த­னை­க­ளுக்கு ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி அடி­ப­ணி­யும்­ என்று  தற்­போ­து­ பி­ர­சா­ரப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதனை மறுக்கும் வகையில் கூட்­ட­மைப்பு எந்த நிபந்­த­னை­க­ளையும்  விதிக்­க­வில்லை என்றும்  ஒப்­பந்தம் எதுவும் செய்­ய­வில்லை என்றும் சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் தற்போது கூறி வருகின்றனர்.

எனவே இவ்வாறான நிலையில் அடுத்த கட்டமாக எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ஆராயவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் எதிர்காலத்தில் ஏதோ ஒருவகையில் தீர்வுகளை காணக்கூடிய நிலைமை ஏற்படும்.  அதற்கேற்றவகையில்  தமிழ் கட்சிகளின் தலைவர்கள்  ஒன்றுகூடி புதிய தீர்மானத்திற்கு வர வேண்டும்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில்  பரிசீலிக்கும் வேட்பாளர்களுடன் பேச்சுக்களை நடத்தி உறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு  ஐந்து கட்சிகளின் தலைவர்களும்  முன்வருவதே இன்றைய நிலையில்  செய்யவேண்டிய காரியம் என்பதை  நினைவு படுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்களம் ( 22.10.2019)