பல வருடங்களாக உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் மயானத்தில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய முதியோர் இல்லத்தில் அவரை ஒப்படைக்க  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறிப்பிட்ட நபர் மஸ்கெலியா தோட்ட மயானத்தில் கடந்த 4 வருடங்களாக தங்கி இருந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

70 வயது மதிக்கத்தக்க இவர் அவ்வழியாக செல்லும் மக்கள் வழங்கும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். 

தொடரும் சீரற்ற காலநிலையில் மயானத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் இருந்துள்ளார். இந்நிலையிலே மேற்படி முதியவரை பொலிஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

குறித்த நபரின் நிலையை கவனத்திற்கொண்ட நீதவான் அவரை நோட்டன் சந்திரா முதியோர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டார். 

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வலுவிழந்தவர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.