மீண்டும் கனடாவின் பிரதமராகின்றார் ஜஸ்டின் ட்ரூடோ

22 Oct, 2019 | 12:17 PM
image

கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி  156 ஆசனங்களை பெறும் நிலை காணப்படுகின்றது.

வலதுசாரி பழமைவாத கட்சிக்கு 122 ஆசனங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் கைப்பற்றிய ஆசனங்களை விட அதிக ஆசனங்களை இந்த கட்சி கைப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளபோதிலும்  நாடாளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாட்டு மக்களிற்கு ஆற்றியுள்ள உரையில் பிரதமர் நாட்டை சரியான திசையில் நகர்த்துவதற்கு எங்கள் மேல நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

தனக்கு வாக்களிக்காதவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் நாட்டை தனது கட்சி அனைவருக்காகவும் ஆட்சியை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47