இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்கள் பல மூடப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் இத்தொழில்துறை சார்ந்தோர் கவலை தெரிவிக்கின்றனர்.
தோட்ட கம்பனிகள் இத்தோட்டங்கள் அனைத்தையும் 99 வருட கால குத்தகைக்கு பெற்றுக் கொண்டு இவற்றிலுள்ள வளங்களிலிருந்து பூரணமான பிரயோசனத்தை பெற்று விட்டு இவற்றை அபிவிருத்தி செய்தல், மற்றும் பராமரிப்பு செய்தல் போன்ற விடயங்களில் அலட்சிய போக்குடன் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பெரும்பாலான தோட்டங்களின் காணிகள் கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படுவதாகவும் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், கட்டிடங்கள் என்பன பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமைகளினால் எதிர்காலத் தில் தேயிலை தொழில்துறை முற்றாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனவும் இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தங்களை மீள் பரிசீலனை செய்து அவற்றை இரத்துச் செய்து தோட்டத்துறையை மீட்டெடுக்க பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM