இரத்தப் புற்று நோயால் தீவி­ர­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த இலங்கையின் இளம் வலைப்பந்­தாட்ட வீராங்­கனை மெலோனி விஜே­சிங்க தனது 17 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இலங்கை வலைப்­பந்து சம்­பி­யன்ஷிப் போட்­டி­யின்­போது சுக­வீ­ன­முற்ற மெலோனி விஜே­சிங்கவுக்­கு, மருத்­துவ சோத­னையில் நோய் தீவி­ர­ம­டைந்­தி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். 

சில நாட்­க­ளுக்கு முன் அவ­ரது நோய் தீவிரமடைந்து மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.   

விசாகா கல்­லூரி மாண­வி­யான மெலோனி 2017 இல் 8ஆவது இளையோர் வலைப்­பந்து உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியில் இடம்­பெற்­றி­ருந்தார்.

இந்தத் தொடரில் பிர­கா­சித்த மெலோனி எதிர்­கால நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுக்கும் நம்­பிக்­கை­யையும் விதைத்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யிலேயே இந்த எதிர்­பார்ப்­பு­களை நிரா­சை­யா­க்கி­ விட்டு இந்த உலகை விட்டே விடை­பெற்­றுள்ளார்.

6 அடி 3 அங்­குலம் உயரம் கொண்ட மெலோனி இலங்கை இளையோர் வலைப்­பந்­தாட்ட அணியின் உப தலை­வி­யா­கவும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந் தார். 

சிறந்த கோல் ஷூட்டராக வலம் வந்த மெலோனி உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரி வில் கல்வி கற்று ஒரு மருத்துவராக ஆவதற்கும் கனவு கண்டிருந்தாராம்.