யாழ்ப்­பா­ணத்தில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷவின் வெற்­ றியை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, முன் னாள் படைத் தள­ப­திகள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளனர்.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாது­காப்புச் செய­லாளராக இருந்த கால­கட்­டத்தில், இறு­திக்­கட்டப் போர் நடந்து கொண்­டி­ருந்த போதும், போருக்குப் பின்­ன­ரான கால­கட்­டத்­திலும் அவ­ருடன் இணைந்து பணி­யாற்­றிய  யாழ்ப்­பா­ணத்தில் கட்­டளைத் தள­ப­தி­க­ளாக இருந்த இரண்டு மேஜர் ஜென­ரல்கள், தேர்தல் நட­வ­டிக்­கை­களில் நேர­டி­யாக ஈடு­பட்­டுள்­ளனர்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்­து­ரு­சிங்க ஆகி­யோரே யாழ்.குடா­நாட்டில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்கு ஆத­ரவு திரட்டும் நட­வ­டிக்­கை­களில் இறக்கி விடப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் இரு­வரும், 2005ஆம் ஆண்­டுக்கும் 2014 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில், 7 ஆண்­டுகள் யாழ். படை­களின் தலை­மை­யக கட்­டளை அதி­கா­ரி­க­ளாக செயற்­பட்­ட­வர்­க­ளாவர். அத்­துடன், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி அதற்குப் பின்னர் வடக்கு மாகாண ஆளு­ந­ரா­கவும் 2015 ஆட்சி மாற்றம் வரை பணி­யாற்­றி­யி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்தில் கட்­டளைத் தள­ப­தி­க­ளாக இருந்த காலத்தில், கொண்­டி­ருந்த தொடர்­புகள், மூலங்­களைக் கொண்டு கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­க­ளையும், அவ­ரது வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­க­ளையும் இவர்கள் எடுத்து வரு­கின்­றனர்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி பொது­ஜன பெர­மு­னவின் ஏற்­பாட்டில், கூட்­டங்­களை நடத்தி வரு­கிறார். இந்­த­நி­லையில், யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, கோத்தபாய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதி யாக்குவதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒத்துழைக்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.