தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான பொது­ஜன பெர­மு­ன­வினர் நான்கு முனைத் தந்­தி­ரத்தை கையாண்டு வரு­வ­தா­கவும் அது குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

தனது முகநூல் பக்­கத்தில் இது­கு­றித்து அவர் பதிவு ஒன்றை இட்­டுள்ளார். அதில் தமிழ்-­முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்­க­ளிக்க வேண்டும்,  அல்­லது, தமிழ், முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும்,  அல்­லது, சஜித் அல்­லாத ஏனைய சிங்­கள வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும்,  அல்­லது, பகிஸ்­க­ரிக்க வேண்டும் ஆகிய நான்கு வழி­களை கையாள வேண்டும் என்­பதே அவர்­க­ளது திட்­ட­மாக உள்­ளது.

இந்த அனைத்தும் சஜித்­துக்கு எதி­ரான வாக்­குகள் என்­பதால், வாக்­கு­களை சித­ற­டித்து, தாம் வெற்றி பெறலாம் என்­பதே இவர்­க­ளது இலக்­காகும்.

இதற்­காக பலரை தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் பிர­சார களத்தில் இறக்­கி­யுள்­ளார்கள்.  அது­மட்­டு­மல்ல, பரீட்­ச­ய­மான பலரை விலைக்கு வாங்கியும், போலி பெயர்களிலும் சமூக ஊடக தளத்திலும் இவர்கள் இறக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.