உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி

Published By: Rajeeban

21 Oct, 2019 | 09:35 PM
image

எஸ்பிஎஸ் நியுஸ்

தமிழில்- ரஜீபன்

அவர் வழமைக்குமாறான பயணிகள் கனமான முதுகுப்பொதிகளுடன் அங்குமிங்கும் நடமாடித்திரிவதை பார்த்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பின் சங்கிரிலா ஹோட்டலின் டேபிள் ஒன் விடுதிக்குஅருகில்  அவர்கள் அவரை தள்ளிவிட்டு சென்றனர்.

நான் அவர்கள் பயங்கரவாதிகள் என  ஒருபோதும் நினைவிக்கவில்லை அவர்கள் முரட்டுத்தனமானவர்களாக காணப்பட்டனர் என தெரிவிக்கின்றார் ஹனேகே மனோகரன்

பின்னர் வெளியான சிசிடிவி காட்சிகள் ஹனேகே மனோகரனிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரியொருவர் காணப்படுவதை காண்பித்துள்ளன.

பெருமளவானவர்கள் காணப்பட்ட உணவகத்தை அவர்கள் உன்னிப்பாக நோக்கினார்கள் அங்கு அனேகமாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே காணப்பட்டனர்.

எங்கு தங்களை வெடிக்கவைக்கலாம் என அவர்கள் திட்டமிடுகின்றனர் என நான் நினைக்கவில்லை என்கின்றார் மனோகரன் 

ஹனே;கேயும் அவரது நண்பர் சாம்நொட்டிலும் கொழும்பிற்கான தங்கள் உயிர்த்தஞாயிறு சுற்றுலாவின் மூன்றாவது  நாளை சங்கிரிலாவில்  செலவிட்டுக்கொண்டிருந்தனர்.

அன்று காலை சங்கிரிலா ஹோட்டலில் உள்ள  உணவகத்தின் உணவுவழங்கும் பெண் முன்வரிசை ஆசனத்தில் அவருக்கு இடமொதுக்க முயன்றார்,ஆனால் அது முடியவில்லை , விதியின் சிறிய விளையாட்டு அவரது உயிரை காப்பாற்றியது.

அன்று அங்கிருந்து எந்த வித பாதிப்புமின்றி உயிருடன் வெளியேறியவர்களில் நானும் ஒருத்தி என்கிறார் அவர்.

அந்த தாக்குதல் 8.40 மணிக்கு இடம்பெற்றது,உணவு மேசையில் காத்திருந்து விட்டு பசி காரணமாக எழுந்து சென்றது தனக்கு நினைவிருக்கின்றது என்கிறார் ஹனேகே

அவ்வேளை அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் கேட்டிராத அந்த சத்தத்தை கேட்டார்.

ஒரு சில நிமிட கருமையும் அமைதியும் பின்னர் அலறல்களாக மாறின.

அவ்வேளை தனது நண்பர் மேசையின் கீழே மறைந்திருந்ததை பார்த்தேன் என்கிறார் அவர்.

நான் பீதியில் உறைந்துபோனேன் நான் எனது வாழ்க்கையில் ஒருபோதும் அச்சப்பட்டதில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மறைந்திருந்த இடத்திலிருந்து எழுந்தபோது அவர் இரத்தக்களறியை பார்த்தார்.

முதலில் நான் ஒரு பெண்ணை பார்த்தேன் அவரது குடும்பத்தை சார்ந்த  யாரோ அவரை எழுப்ப முயன்றுக்கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் மேசைக்கு நடுவில் சிக்குண்டிருந்தார் தலை பின்னால் காணப்பட்டது அவர் உயிருடன் இருக்கின்றார் என நான் கருதவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

அங்கு இரத்தக்குவியல் காணப்பட்டது,உடல்கள் காணப்பட்டன காயமடைந்தவர்கள் காணப்பட்டனர் அவர்கள் அனைவரும் சிவந்த குருதியில் தோய்ந்திருந்தனர் என அவர் தெரிவிக்கின்றார்.

அந்த பயங்கரமான சம்பவத்தின் பின்னர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு திரும்பிய பின்னர் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுவதற்கான நிதிசேகரிப்பில் ஈடுபட அவர் தீர்மானித்தார்.

20 தொண்டர்களுடன் இணைந்து அவர் விருந்துபசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்,உணவுதயாரிப்பது எப்படி என்ற நூலை வெளியிட்டார்,இணையத்தில் சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததன் நோக்கம் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதே என்கிறார் அவர்.

இது நான் முன்னர் செய்திராத ஒன்று இதன் காரணமாக அது கடினமாக காணப்பட்டது நாங்கள் சில தவறுகளை செய்தோம் ஆனால் எங்களால் எவ்வளவு நிதியை திரட்ட முடிந்ததோ அது அவ்வளவும் பயனுள்ளது என்கின்றார் ஹனேகே.

சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் காயமடைந்து இன்னமும் மருத்துவமனையில் இருப்பவர்களை அவர் சந்தித்தார்.

வீடுகளிற்கு திரும்பமுடியாதவர்கள் இன்னமும் சத்திரகிசிச்சைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டிருப்பவர்கள் என பலர் மருத்துவமனையில் உள்ளனர் என்கிறார் அவர்.

கடந்த வாரம் உடலிருந்து வெடிகுண்டு சிதறல்கள் அகற்றப்பட்ட ஒருவரை கண்டேன் சிலருக்கு பல சத்திரசிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்கிறார் ஹனேகே.

சிலருக்கு காயங்கள் ஆறுவது இன்னமும் சாத்தியமாகவில்லை என்கிறார் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த பிரமுடித் ரூபசிங்க.

குண்டுவெடிப்பின் பின்னர் ஏற்பட்ட காயங்கள் மனக்காயங்களுடன் பலர் இன்னமும் உள்ளனர் என்கிறார் அவர் அவர்களிற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன உடல்ரீதியிலான காயங்கள் மாத்திரமல்ல உளரீதியிலான காயங்களும் உள்ளன என்கிறார் அவர்.

அன்றைய தினம் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் சிக்கிய பலரை போல எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற குற்றவுணர்ச்சி என்னை பாதிக்கின்றது என்கிறார் ஹனேகே.

நாங்கள் அனைவரும் மனிதர்கள் சதையும் எலும்பினாலும் ஆனவர்கள் என்பதை நீங்கள் மிக வேகமாக உணர்கின்றீர்கள் என்கிறார் அவர்.

அவர்கள் அனுபவித்துகொண்டிருப்பதுடன் ஒப்பிடும்போது நான் எதனையும் அனுபவிக்கவில்லை,பாதிக்கப்பட்ட பலர் மிகவும் நெருக்கடியான வாழ்க்கையை கொண்டிருந்தவர்கள் அவர்கள் நாளாந்தம் இயங்குவதற்கான தங்கள் திறனையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டனர் என்கிறார் அவர்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களிற்கான திட்டங்களை கடந்த மாதம் இலங்கையிலும் தாய்லாந்திலும் இவர் நடத்தியுள்ளார்.மிகவும் பிரபலமான சமையல்கலைஞர்களான தர்சன் முனிதாச ககன் ஆனந் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

பல சமையல்கலைஞர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்,இது தவிர இது தொடர்பில் எங்களிற்கு பல அழைப்புகள் வருகின்றன என்கிறார் அவர்.

இந்த நிகழ்வுகளின் மூலம் சேர்க்கப்படும் பணத்தை கைன்ட் ஹர்ட்டட்  லங்கன்ஸ் என்ற அமைப்பிற்கு வழங்கவுள்ளனர், குண்டுவெடிப்பில் காயமடைந்து இன்னமும் சிகிச்சை பெற்றுவருபவர்களிற்கு உதவுவதற்கே இந்த நிதி பயன்படுத்தப்படும்.

நடந்ததை மாற்றியமைக்க முடியாது அவர்களின் வலிகளை போக்க முடியாது ஆனால் நாங்கள் கூட்டாக அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறார் ஹனேகே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04