(மயூரன் ) 

யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டி  பகுதியில் கணவருடன் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி  கொலை  செய்யப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி வயது 70 என்பவரே  கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணும் கணவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்கள். 

இந்நிலையில் நேற்றைய  தினம் இரவு  உணவினை உட்கொண்ட பின்னர் கை கழுவுவதற்காக வீட்டின் பின் புறமுள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். 

அதன் போது குளியல் அறைக்குள் மறைந்திருந்த இனந்தெரியாத நபரொருவர் வயோதிபப் பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் ஓடிவந்த வயோதிபப் பெண் வீட்டினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.