பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய  உணவு  பொருட்களின் சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன்  தெரிவித்தார்.

அதன்படி தற்போது மிளகாய் ஒரு கிலோவின் விலை 450-500 ரூபாவாக காணப்படுகின்றது.  இறக்குமதி  செய்யப்படும் காய்ந்த  மிளகாய்  ஒரு கிலோவிற்கு வரி 20 ரூபாவினால் குறைப்பதற்கும்,  இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கு வரி 25 ரூபா வரை  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்கு மதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவிற்கு இதற்கு முன்னர்  இறக்குமதி வரி 25 ரூபாவாகவும், மீனின் இறக்குமதி வரி 100 ரூபாவாகவும் காணப்பட்டன.

பண்டிகை காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மீன்  மற்றும், முட்டைக்கு அதிக  கேள்வி  எழுந்துள்ளமையினால் இவ்விரு உணவு  பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கை செலவுகள் குறித்து ஆராயும் குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

அரச களஞ்சியசாலையில் தற்போது உள்ள  நெல்  48,000 மெற்றிக் தொன் சிறு மற்றும் மொத்த நெல்  உற்பத்தியாளர்களின் ஊடாக   விரைவாக அரிசியாக்கி அதனை சதோச ஊடாக நாடு அரிசி ஒரு கிலோ,  80  ரூபாவிலும், சம்பாஒரு கிலோ 85 ரூபாவிலும், விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கை செலவு குறித்து ஆராயும் குழு  சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.