(ஆர்.விதுஷா)

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பில் இது வரையில் 140     முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக  சுதந்திரமானதும்   நியாயமானதுமான தேர்களுக்கான  மக்கள்  செயற்பாட்டு ( பெப்ரல் ) அமைப்பின்  பணிப்பாளர்  ரோஹண  ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அவற்றில் அரச சொத்துக்களை  சட்டவிரோதமான முறையில்   பாவித்தல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும்  அறிவுறுத்தல்களை பின்பற்றாமை  தொடர்பிலேயே அதிகளவான  முறைப்பாடுகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன.  

தேர்தல் வன்முறைகள்  தொடர்பில் முகநூல் கணக்கினூடாகவும்,  0112558572 என்ற தொலைநகலுடகவும், 011 2558570/71 என்ற   தொலைபேசி  இலக்கங்களினூடாக  தொடர்பு  கொண்டு  முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

இதேவளை ஜனாதிபதி  தேர்தலின் போது  இடம் பெறும்  வன்முறை சம்பவங்கள்  தொடர்பில் கண்காணிப்பதற்காக வெளிநாடுகளின்  தேர்தல் கண்காணிக்கும்  அமைப்புக்கள்  இலங்கை வரவுள்ளன. 

தெற்காசியாவின் தேர்தல் வன்முறைதொடர்பில் கவனம் செலுத்தும்   பெம்போசா மற்றும்  யூகோபா போன்ற  அமைப்புக்களே  இதன்  போது இலங்கைக்கு  வருகைதரவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.