பங்களாதேஸ் கிரிக்கெட்டினை முன்னேற்றுவது தொடர்பான தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை  சர்வதேச போட்டிகளை புறக்கணிப்பது என பங்களாதேஸ் அணி வீரர்கள் தீர்மானித்துள்ளனர்.

பங்களாதேஸ் அணி வீரர்களின் இந்த கோரிக்கை காரணமாக இந்தியாவிற்கான அடுத்த மாத சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

பங்காளதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர்கள்  மாநாட்டில் இதனை அறிவித்துள்ளார்.

அனைத்து முதல்தர மற்றும் தேசிய போட்டிகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிற்கான தேசிய அணியின் பயிற்சிகளும் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த 11அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றோம். எங்களில் சிலர் நான்கைந்து வருடங்களிற்கும் ஏனைய சிலர் பத்து வருடங்களிற்கும் விளையாடக்கூடும் என தெரிவித்துள்ள அவர்கள் எங்களிற்கு பின்னர் விளையாட வரும் வீரர்களிற்கு நல்லசூழலை ஏற்படுத்தவேண்டும் அதன் காரணமாக பங்களாதேஸ் கிரிக்கெட் முன்னோக்கி நகரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.