தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் நபர் ஒருவர் நிர்வாணமாக சிங்கத்தின் கூண்டுக்குள் பாய்ந்த சம்பவமொன்று சாண்டியாகோ பகுதியில் பதிவாகியுள்ளது.  இதனால் குறித்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் சிங்கங்கள் இருந்த பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சிங்கங்கள் மத்தியில் குதித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த சிங்கங்கள் குறித்த நபரை கடித்துள்ளன. 

எனினும் அங்கிருந்த காவலர்கள் சிங்கங்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு தாக்குதலுக்கு இலக்கான நபரை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.